சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாய், குவைத், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.37 கோடி மதிப்புள்ள 3.1 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், 4 பயணிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

3.1 Kg gold seized in chennai airport

ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம், சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள், இரண்டு விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பசையை  கைப்பற்றினர். 

கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களிலும் பல பிரிவுகள் உள்ளன - கிருஷ்ணசாமி

இதை அடுத்து குவைத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான  பயணிகளை சோதனையிட்டபோது, சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த தங்க வளையங்கள், மற்றும் மோதிரங்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில்  அபுதாபியில் இருந்து சென்னை வந்த எத்தியாடு  ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனையிட்டபோது, சிவகங்கையைச் சேர்ந்த மற்றொரு பயணி தன்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப்பசை பார்சல்களை கைப்பற்றினர். 

காவல் நிலையங்களில் அறிமுகமான “GREAT” திட்டம்; இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

சுங்க அதிகாரிகள் தொடர்ச்சியாக நடத்திய சோதனையில் 4  விமானங்களில்  வந்த 4  பயணிகளிடம் இருந்து, தங்கபசை,  தங்க வளையங்கள், மோதிரங்கள் போன்றவைகள் என மொத்தம் 3.1 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 1.37 கோடியாகும்.. இதை அடுத்து கடத்தல் பயணிகள் 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios