ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவருக்கும் 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஆரம்ப கட்டத்தில் அடக்கி வாசித்து வந்த நிலையில் மே மாதம் முதல் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது.  குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில்,  கொரோனா தொற்று ஏற்பட்டு 2வது முறையாக பாதிப்பு ஏற்படும் நபர்கள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஏராளமான உயிர்களை காத்த செவிலியர் கண்காணிப்பாளர் தங்கலட்சமி,  2வது முறையாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த செய்தியே எடுத்துகாட்டாகும். 

இந்நிலையில், குணமடைந்தவர்களுக்கு 2வது முறையாக தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கட்டாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ்சின் தன்மைகள் எதையுமே அறுதியிட்டு கூற இயலாத சூழலில் ஒருமுறை தொற்று ஏற்பட்டு நீக்கினாலும் மீண்டும் தொற்று ஏற்படா வண்ணம் நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

வெகு சிலருக்கு வேண்டுமானால் நோய் எதிர்ப்புத்திறன் காரணமாக மறுமுறை வைரஸால் அறிகுறிகள் ஏதும் தென்படாமல் இருக்கலாம். ஆனால், நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ரத்தசோகை உடையவருக்கு  மீண்டும் தொற்று ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகையால், ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிட கூடாது என்பதே மருத்துவர்கள் கருத்தாகவே உள்ளது.