Asianet News TamilAsianet News Tamil

சுமை தொழிலாளர்களுக்கு 29 சதவீதம் ஊதிய உயர்வு... - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

29% pay hike for overhead workers ... - Minister Kamaraj announces
Author
Chennai, First Published Jul 11, 2019, 3:58 PM IST

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்பம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன்கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  மொத்தம் 20,028 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.6.02 லட்சத்துக்கு காப்பீடு வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றி அமைக்கப்படும். நாளை முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதியம் உயர்த்தி தரப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios