தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 6 நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,380 பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மட்டும்  1,227 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 44,132ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால்  39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனையில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 28 பேரும் அடங்குவர். மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகாரித்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் இன்று 25,148 மாதிரிகள் உட்பட இதுவரை 9.44,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக இருந்த நீலகிரியில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகியவை பாதிப்பில் முதல் 5 இடங்களில் உள்ளன. திருவள்ளூர் 156,  செங்கல்பட்டு 146, மதுரை 137, திருவண்ணாமலை 114,  காஞ்சிபுரம் 59, தேனி 48, திண்டுக்கல் 44, கள்ளக்குறிச்சி 43, திருச்சி 41, தூத்துக்குடி 38, வேலூர் 36, கடலூர் 29, ராணிப்பேட்டை 29, விருதுநகரில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.