Asianet News TamilAsianet News Tamil

ஏழை பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுக்கப்படும்... தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

ஏழை எளிய பெண்களுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம், 528 பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் சுமார் 48 கோடியே 81 லட்சம் மதிபீட்டில்  நாட்டுக்கோழி இண விருத்தி பண்ணை அமைக்கப்பட உள்ளதாகவும் கால் நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
 
25 fowl chicks per poor women
Author
Chennai, First Published Jul 6, 2019, 1:54 PM IST

ஏழை எளிய பெண்களுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம், 528 பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் சுமார் 48 கோடியே 81 லட்சம் மதிபீட்டில்  நாட்டுக்கோழி இண விருத்தி பண்ணை அமைக்கப்பட உள்ளதாகவும் கால் நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலுரை அளித்தப்பின், 28 புதிய அறிவிப்புக்ளை வெளியிட்டார். அதில், சேலம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி இன விருத்தி பண்ணை 48 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 20 லட்சம் நல்ல தரமான அசல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 2000 மெட்ரிக் டன் தரமான தீவனமும் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் 2.40 லட்சம் பெண்களுக்கு 60 லட்சம் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன. இதில், இதுவரை கிராமங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த விலையில்லா நாட்டுகோழித்திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 528 பேரூராட்சிகளில் 47,500 பெண்களுக்கு  தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும், கிராமப்புறத்தில் 1, 92, 500 பெண்களுக்கு தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios