Asianet News TamilAsianet News Tamil

கிறுக்கு பிடித்த கொரோனாவால் அதிர்ச்சி.. சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளில் 204 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு..!

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

204 pregnant women affected corona virus positive
Author
Chennai, First Published May 25, 2020, 5:24 PM IST

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் 16,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576ஆக உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

204 pregnant women affected corona virus positive

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கக்கூடியவர்களாக குழந்தைகள், ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என கருதப்படுகின்றனர்.  இந்நிலையில், சென்னையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

204 pregnant women affected corona virus positive

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும், ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணி பெண்களும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 கர்ப்பிணி பெண்கள் என, 204 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசு வழிகாட்டுதலின் படி கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் தேதி குறிப்பதற்கு முன்னதாகவே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios