தன் தாத்தா வேலை செய்யும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது  குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே. ஆர் தோப்பூர் பகுதி  சார்ந்தவர் கார்த்திக் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் கடைசி குழந்தை தமிழரசு வயது ( 2) குழந்தை தாத்தா பழனி, இவர் அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு என்ற இடத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும்  மில்லில் வேலை செய்து வருகிறார்.  வழக்கம்போல் இன்று வேலைக்கு போகும்போது பேரன் தமிழரசன் உடன் வருவதாக அழுததால், பேரனைதன்னுடன் அழைத்துச்சென்ற பழனி,

 

கயிறு திரிக்கும் மில்லுக்கு அழைத்துச் சென்று,  அங்கு விளையாட விட்டு,  கயிறு திரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது கயிறு திரிக்க பயன்படுத்தும் நார்களை  ஊறவைக்கும் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தீடிரென  தண்ணீர் தொட்டிக்குகள் தவறி விழுந்துள்ளது.  கயிறு திரிக்கும் மிஷின் சத்தத்தில்,  குழந்தை  விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.  பிறகு வெகு நேரம் கழித்து,  குழந்தையை காணவில்லை என்று அங்கும் இங்கும் தேடினார் கடைசியாக சந்தேகப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் தேடியபோது மிகுந்த  அதிர்ச்சி காத்திருந்தது, குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் கிடந்தது. குழந்தையை மீட்டு,  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடித்து,  மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள்,  ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.  இச்சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்தது குறித்து  விசாரணையில் கூறக்கூடாது என நார் மில்  உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது இச்சம்பவம் குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள அதே நேரத்தில் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.