செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!
செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் வகுப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்போது? அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்!!
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (04-5-2023) மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த காமாட்சி, கோவிந்தன், அமுலு, சுகன்யா, குழந்தைகள் ஹரிபிரியா, மற்றும் கனிஷ்கா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதையும் படிங்க: சித்தமருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கோரி 7 முறை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம் - அமைச்சர் சுப்பிரமணியன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.