அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை கடந்த 1ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் இருந்து பாகல்காம், பால்தால் வழியாக சென்று, பனிலிங்க தரிசனத்தை பக்தர்கள் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 83 பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர்.

அடுத்த மாதம் 15ம் தேதி இந்த யாத்திரை முடிகிறது. இதனிடையே, 1,152 பெண்கள், 95 மடாதிபதிகள், 28 சிறுவர்கள் உட்பட 4,584 பேரை கொண்ட 16வது குழு, பனிலிங்க தரிசனத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது. பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து செல்ல 192 வாகனங்களில் அவர்கள் சென்றனர்.

இவர்களில் 2,612 பேர் பாகல்காம் வழியாகவும், 1,972 பேர் பால்தால் வழியாகவும் செல்கின்றனர். கடந்தாண்டு மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 6 பேர் பனிலிங்க தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.