தமிழகத்தில் 10-க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் 1,848 அரசுப் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகள் பல தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், என்ன முயற்சி செய்தும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. பல பள்ளிகளில் சரியான கட்டமைப்பு இல்லை. ஆகையால், பெற்றோருக்கு அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை இணைக்கும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை இணைக்கும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவான பள்ளியிலிருந்து மாணவர்களை மாற்ற, அருகாமையில் உள்ள பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முன்னதாக, அண்மையில் நீலகிரியில் 3 தொடக்கப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி என மொத்தம் 6 பள்ளிகளை மாவட்ட நிர்வாகம் மூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.