Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் பெரும் சோகம்: இன்று அதிகபட்சமாக 44 பேர் உயிரிழப்பு.. 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46504ஆக அதிகரித்துள்ளது. 
 

1843 new corona cases confirmed in tamil nadu on june 15 and 44 deaths
Author
Chennai, First Published Jun 15, 2020, 7:32 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

அந்தவகையில், தமிழ்நாடு பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக 18 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று அதிகபட்சமாக 18782 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று 18403 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், 1843 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46504ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாலில் 1257 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 33244ஆக அதிகரித்துள்ளது.

1843 new corona cases confirmed in tamil nadu on june 15 and 44 deaths

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25344ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 479ஆக அதிகரித்துள்ளது. நேற்று 38 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உயிரிழப்பு அதிகரித்துவருவதால், இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்தை கடந்துவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios