தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கரூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், திருச்சி ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அரியலூரில் தலா 150 மி.மீ., கும்பகோணம், அரூரில் 110 மி.மீ., திருப்பத்தூர், செட்டிகுளம், நன்னிலத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.