பிரபல மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலில் பிரியாணி சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலக்குறைவு.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை
சென்னையில் பல வகையான உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இளைஞர்கள் வகை வகையான உணவை சுவைக்க வேண்டி பல இடங்களுக்குச் சென்று பிரியாணியை சாப்பிடுகின்றனர்.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் பல வகையான உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இளைஞர்கள் வகை வகையான உணவை சுவைக்க வேண்டி பல இடங்களுக்குச் சென்று பிரியாணியை சாப்பிடுகின்றனர். அவ்வப்போது அவர்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணியே அவர் உயிருக்கு எமனாக மாறிவிடுகிறது. உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் இரவு பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட 150 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 150 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- பைக் விபத்தில் கல்லூரி மாணவன் பலி! வேதனையில் கண்ணாடி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொண்ட நண்பர்..!