சென்னை ஆவடியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது . முதலில் நண்பர்களாக பழகியவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். தன்னை விட வயது குறைந்த சிறுவன் என்பதையும் மறந்து அந்த சிறுமி காதலித்துள்ளார் .

இந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கவே ,சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளான் .
கர்ப்பமானது குறித்து சிறுமி அவனிடம் கூறியுள்ளார் . அதன் பிறகு அவன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . சிறுமியிடம் பேசுவதை அவன் தவிர்த்துள்ளான் .

இதனால்  என்ன செய்வதென்று அறியாமல் சிறுமி தவித்துள்ளார்  . இந்தநிலையில் கர்ப்பமாகி 5 மாதம் ஆகியுள்ளது . இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவு செய்த சிறுமி பெற்றோரிடம் கூறி காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார் .

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் . சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது . இருவரும் மைனர் என்பதால் சிறுவன் மீது போக்ஸோ சட்டம் செல்லுபடி ஆகுமா என்று விசாரித்து வருகின்றனர் .

பள்ளிப்  படிப்பை கூட முடிக்காத வயதில் இது தேவை தானா இருவரின் பெற்றோரும் நொந்து கொண்டுள்ளனர் .