இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- நோய் தடுப்பில் சமுதாயப்  பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற மண்டலங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது. மேலும் 'ஆங்கில மருத்துவத்துடன் சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள், முகக்கவசம் அணிவது, கைகழுவுவதை முறையாக பின்பற்ற வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடுமையாக பணியாற்றி வருகிறோம். கண்ணகி நகர், எழில்நகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு முழு கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். 

மேலும், பேசிய அவர் சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதற்கு பயத்தை உண்டாக்கும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது என்றார்.

பரிசோதனைக்கு சென்ற ஒருவரின் சோதனை முடிவுகளில் முதலில் நெகட்டிவ் என வரும். பின்னர் ஒரு சில நாட்களில் மீண்டும் அவருக்கு பாஸிட்டிவ் ஆக வரும். எனவே  அவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமாகிறது என்றவர், முழுமையாக நெகட்டிவ் என முடிவுகள் வந்தால் அந்த நபர்களுக்கு தனிமைப் படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.