"நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க".. டான்ஸ் ஆடுவோம்.. 11ம் வகுப்பு மாணவர் பாத்ரூமில் திடீர் தற்கொலை.!
தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய விஷ்வா, குளிக்க செல்வதாக கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். இதன்பின்னர் ரொம்ப நேரமாக வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர்.
ஆலந்தூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் மடுவின்கரை 1வது தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரின் மகன் விஷ்வா(17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய விஷ்வா, குளிக்க செல்வதாக கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். இதன்பின்னர் ரொம்ப நேரமாக வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால், கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவன் விஷ்வா தூக்கில் கடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கதறி துடித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று மாலை மாணவர்களுடன் சிரித்து விளையாடும்போது விஷ்வா, ‘‘நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க’’ என்று கேட்டபோது ‘’நன்றாக டான்ஸ் ஆடுவோம்’’ என்று நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இந்நிலையில், விஷ்வா தற்கொலை செய்யும் எண்ணத்துடன்தான் இவ்வாறு கேட்டுள்ளார்’ என்று நண்பர்கள் கதறி அழுதனர்.
இதையும் படிங்க;- 150 ஆண் நண்பர்கள்...! அதிரவைக்கும் அரசு நர்ஸ் கொலை பின்னணி..!