Asianet News TamilAsianet News Tamil

150 ஆண் நண்பர்கள்...! அதிரவைக்கும் அரசு நர்ஸ் கொலை பின்னணி..!

செல்வியின் வீட்டில் சென்று ஆதாரங்களை சேகரித்த போது அங்கே 500க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கொலை செய்யப்பட்டுவதற்கு முன்பு செல்வி உல்லாசமாக இருந்ததற்கான தடயங்களும் சிக்கின.

andipatti government nurse murder case...shocking informati
Author
Theni, First Published Dec 21, 2021, 8:19 AM IST

ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனை செவிலியர் கொடூரமாக முறையில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்களான 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு வந்து சென்ற ஆண் செவிலியர் ஒருவர் தான் குற்றவாளி என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். 

andipatti government nurse murder case...shocking informati

அதேபோல், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, செல்வியின் வீட்டில் சென்று ஆதாரங்களை சேகரித்த போது அங்கே 500க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கொலை செய்யப்பட்டுவதற்கு முன்பு செல்வி உல்லாசமாக இருந்ததற்கான தடயங்களும் சிக்கின.

andipatti government nurse murder case...shocking informati

இதனையடுத்து, செல்வின் செல்போனை ஆய்வு செய்ததில் செல்விக்கு பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது கணடுபிடிக்கப்பட்டது. செல்வி தொடர்பில் இருந்த செல்போன் நண்பர்கள் 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன்படி கடந்த 10ம்  தேதியன்று, தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர் ராமச்சந்திரபிரபு (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர், சென்ற 11ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

andipatti government nurse murder case...shocking informati

கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைக்கு இடமாறுதல் ஆகினர். ஆனால் அவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது. செல்வியிடம் கடனாக கொடுத்த பணத்தை தரும்படி ராமச்சந்திரபிரபு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. 

 

சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் செல்வியின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்த காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது செல்விக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் செல்வியை அவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை நடந்த வீட்டில் பதிவான ரத்தக்கறை படிந்த கால்ரேகை தடயங்கள், ராமச்சந்திரபிரபுடன் கால்தடத்துடன் பொருந்தியது. மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை ராமச்சந்திரபிரபு எடுத்து சென்றுள்ளார். அதனை பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவர் அடகு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து செல்வியை கொலை செய்தது, ராமச்சந்திரபிரபு தான் என்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட ராமசந்திரனும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios