Asianet News TamilAsianet News Tamil

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 24-ம் தேதி நடக்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 
 
10th public exam not cancel...school education
Author
Chennai, First Published Apr 13, 2020, 7:02 PM IST

ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 24-ம் தேதி நடக்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

10th public exam not cancel...school education

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ, ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் முன்னேற்றச் சங்கமும் கோரிக்கை விடுத்தது.  ஆனால், முதல்வர் எடப்பாடி பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், உயர்கல்விக்கு முக்கியமான ஒன்று என்பதால் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

10th public exam not cancel...school education

இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் மறுதேதி, ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios