10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள்சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என்று அரசு  தீவிரமாக உள்ளது.

இந்நிலையில்,  12,000க்கும் மேற்பட்ட பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் மாற்றம் இருக்கக்கூடிய காரணத்தினாலும் அவர்கள் முந்தைய ஹால்டிக்கெட் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் புதிய ஹால்டிக்கெட்டை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

நாளை முதல் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தங்களின் பள்ளியில் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு புதிய ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.