தமிழ்நாட்டில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 8600ஐ கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
நேற்று நிலவரப்படி, தமிழ்நாட்டில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கு மேலும் 106 பேருக்கு கொரோனா இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10,655 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 1075 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று வரை 9527 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இன்று ஒருநாளில் மட்டும் சுமார் 1100 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 106 பேருக்கு உறுதியாகியுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 39,041 பேரும் அரசு கண்காணிப்பில் 162 பேரும் இருப்பதாகவும், 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 58,189 பேர் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 12, 2020, 6:11 PM IST