Public Exam: 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வு எப்போது? அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

10 11 12 public Examination Date Announcement

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். 

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

10 11 12 public Examination Date Announcement

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுஅதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.  

10 11 12 public Examination Date Announcement

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும்,  11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி  வரை நடைபெறுகிறது. ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios