Asianet News TamilAsianet News Tamil

பரிசு விழுந்துள்ளதாக ரூ.12 லட்சம் மோசடி; புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை இழந்து தவிக்கும் குடும்பம்

அரியலூர் மாவட்டத்தில் பரிசு பொருள் பார்சல் வந்துயிருப்பதாக கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

youngster raise complaint in rs 12 lakh money laundering case in ariyalur
Author
First Published Mar 29, 2023, 3:43 PM IST

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின் செல்போனுக்கு வாட்சப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு  ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண்  தன்னுடைய  மகள் பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு  பரிசு தொகை மற்றும்‌ பரிசு பொருட்கள்  விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர்.

மேலும் பரிசுப் பொருட்கள் தற்போது விமான நிலையத்தில் உள்ளன. இதனை பெற ஜிஎஸ்டி கட்ட முதலில் 35 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவனான விமல்ராஜ் 35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். பின்னர் 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

கோவையில் ரயில் மோதி முதியவர் பலி; உயிரிழந்தவரின் தலை மாயமானதால் காவல்துறை விசாரணை

விமல்ராஜின் தந்தை செல்வராஜ்க்கு தொண்டை புற்று நோய் உள்ளதால் சிகிச்சைக்காக பரிசு தொகை ரூ.33 லட்சமும், பரிசு பொருட்களும் கிடைக்கும் என நம்பி அக்கம், பக்கத்து வீட்டினரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் தான் பரிசு பொருள் என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மோசடி குறித்து விமல் ராஜ் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடியாக பெல் நிறுவனத்திற்குள் நுழைந்த கமேண்டோ படை; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios