அதிரடியாக பெல் நிறுவனத்திற்குள் நுழைந்த கமேண்டோ படை; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்
திருச்சி திருவெறும்பூர் அருகே செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென 150 கமேண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனத்திற்குள் திடீரென தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி நடந்து கொள்வது என ஒத்திகை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யப்படாமல் 120 படை வீரர்களும், 40 தமிழக கமேண்டோ படை வீரர்களும் தொழிற்சாலையினுள் அதிரடியாக நுழைந்தனர். வீரர்கள் ஒத்திகைக்காகத் தான் இப்படி வருகின்றனர் என்பதை அறியாத பணியாளர்கள் நடப்பதை அறியாமல் அச்சத்தில் உறைந்தனர்.
இரவு 10 மணியளவில் தொடங்கிய இந்த ஒத்திகையானது அதிகாலை 2 மணியளவில் நீடித்தது. வீரர்களின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை நேரில் பார்த்த தொழிலாளர்கள் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்ததும் இது ஒத்திகை நிகழ்வு என்பதை புரிந்து கொண்டனர்.
கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி தொடர் செல்போன் திருட்டு; திருட்டு மன்னன் கைது
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்திலும் இதே போன்ற ஒத்திகையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீரர்கள் பூட்ஸ் கால்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததால் அப்பகுதியில் இருந்த பட்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீரர்களின் இந்த செயலால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.