அரியலூர் பெண் அரசு மருத்துவரை செருப்பால் அடித்த வாலிபர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரை செருப்பால் தாக்கிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் சத்யா பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது அக்கா மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனுக்கு ஊசி போட மறுத்து சத்தம் போட்டுள்ளான்.
அப்போது சிறுவனை சத்யாவின் கணவர் சிலம்பரசனை பிடிக்க சொல்லியுள்ளார். அப்போது சிலம்பரசன் கையில் குழந்தை இருந்ததால் அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் நீ யார், எந்த ஊர் என திட்டி பிரச்சினையை ஆரம்பித்துள்ளார். மருத்துவரின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இளம் பெண்ணை வெளிநாட்டிற்கு கடத்த சதி? ஈரோட்டில் பெற்றோர் கதறல்
இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மருத்துவர் சத்யா மற்றும் கணவர் சிலம்பரசனை செருப்பால் சுரேஷ் அடித்து தாக்கியுள்ளார். இது குறித்து மருத்துவர் சத்யா இரும்பிலிகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுரேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
9 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்த கைதறி துறை 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது - அமைச்சர் பெருமிதம்