விநாயகர் சிலையை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் மோதல்; விஸ்வ இந்து அமைப்பு பொறுப்பாளர் கைது

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அனுமதியின்றி வைப்பதற்கு தயாராக இருந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்ய விடாமல் தடுத்த விஸ்வ இந்து அமைப்பு பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

VHP person arrested in ariyalur district vel

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் கிராம மக்கள் சார்பாக 6 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வசந்த் மற்றும் தேளூர் காவல் உதவி ஆய்வாளர் சாமி துரை சிலையை அகற்றச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினர் கோட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று சிலையை வைக்க வேண்டும் எனவும் தற்போது சிலையை எடுத்து பள்ளி கட்டிடத்தில் வைக்க உள்ளோம் என கூறினர். 

அப்போது விஸ்வ இந்து பரிஷத்   திருச்சி கோட்ட பொறுப்பாளர் முத்து வேல் காவல் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். இதனையடுத்து காவல் துறையினர் சிலையை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்தனர்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; எம்.பி.களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்

மேலும் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த முத்துவேலை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள முத்து வேல்  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள விடுதியில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் விடியோ ஆதாரம்‌ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios