விசிக கொடி கம்பத்திற்கு தீ வைத்த மர்மநபர்களால் அரியலூரில் பரபரப்பு; திடீர் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராம பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசிக கொடிக்கம்பமும் உள்ளது. இதனிடைய நேற்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், விசிக கொடி கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த கொடியை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர்.
வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள தலைநகரை தமிழ் உறவுகள் ஓடிவந்து உதவ வேண்டும் - சீமான் கோரிக்கை
இதை அறிந்த விசிக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது விசிக கொடி சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கூவாகம் கடைவீதியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த குவாகம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் சற்று அமைதியடைந்த நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக குவாகம் - கொடுக்கூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.