மருத்துவ கழிவுகளை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்ட இருளர் மக்கள்? அரியலூரில் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகளை 100 நாள் வேலை திட்டத்தில் இருளர் பழங்குடியின மக்களை வைத்து வேலை வாங்கியதாக பரவும் வீடியோவால் பரபரப்பு.

tribal people were forced to dispose of expired medical waste at a primary health centre In Ariyalur district

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத் தெருவில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கியுள்ளனர். இதனை   மாவட்ட ஆட்சியர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் கூறியதாக கூறி பஞ்சாயத்து பணியாளர் பிரவீனா மற்றும் அண்ணாதுரை  ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டிடத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகள் பல வருடங்கள் ஆன நிலையில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அதனை சுத்தம் செய்ய கூறி உள்ளனர். 

இதனை மறுத்த போது இதை சுத்தம் செய்யா விட்டால் வேலை இல்லை என்று கூறியதாக கூறுகின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளே மருத்துவமனை கட்டிடம் சித்த மருத்துவம் பிரிவு அருகில் கட்டிடத்தில் ஓரம் ஒரு நாய் இறந்த நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

உடையார் பாளையத்தில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; நண்பர்களுடன் குளித்தபோது நேர்ந்த சோகம்

இந்த காலாவதியான ஆரம்ப சுகாதார மருத்துவ கழிவுகளால் அதை அப்புறப்படுத்த சென்றவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் இந்த கழிவுகளை உபகரணங்கள் இன்றி அப்புறப்படுத்தி அதன்‌மூலம் நோய் தொற்று ஏற்பட்டு குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

தேனியில் 150 அடி ஆழ கிணற்றில் குதித்து நிறைமாத கர்ப்பிணி விபரீத முடிவு; போலீசார் விசாரணை

ஆகையால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், மேலும் இதே மருத்துவமனையை தான் நாங்களும் பயன்படுத்தி வருகிறோம். எனவே மருத்துவமனை சுற்றுப்புறத்தை தூய்மை செய்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios