பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளில் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; நண்பர்களுடன் குளித்தபோது நேர்ந்த சோகம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளம் பெரிய ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் கள்ளங்குடி தெருவை சேர்ந்தவர் சங்கர். லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சபரிவாசன். இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் உடையார் பாளையம் அடுத்த தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
கண்காட்சியை பார்வையிடுவதற்காக சபரி வாசனும் நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உடையார்பாளையத்தில் உள்ள பெரிய ஏரியில் சபரிவாசன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சபரிவாசன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்க நண்பர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில் கரைக்குத் திரும்பி சத்தம் போட்டு உள்ளனர்.
50 வயது பெண்ணை அடித்து கொன்ற கள்ளக்காதலன்; கரூரில் பரபரப்பு சம்பவம்
மேலும் அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி சபரிவாசனை தேடியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் இறங்கி சபரிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சபரிவாசன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சபரி வாசனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சபரிவாசன் தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.