கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவால் பரபரப்பு; காவல்துறை விசாரணை

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்று நீரில் திடீரென மிதந்து வந்த பெண் சிசுவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

new born baby's death body found kollidam river in ariyalur district

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில்  உள்ள முண்டனார் கோவில் அருகில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில்  மர்மமான பொருள் மிதந்து வருவது போல் தெரிந்துள்ளது.  இதனையடுத்து சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பார்த்தனர். 

அப்போது பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் ஆற்றில்  மிதந்து வந்த பெண் சிசுவை தூக்கி வந்து கரையில் வைத்தனர். இது குறித்து திருமானூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் காவல் துறையினர் பெண் சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கல்யாணத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த நண்பர்கள்; மணமகன், மணமகள் வீட்டார் பயங்கர மோதல் 
 

மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பெண் சிசுவை ஆற்றில் வீசியது யார்? எங்கே வீசப்பட்டது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் சிசு கொள்ளிடம் ஆற்றில்  மிதந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios