Asianet News TamilAsianet News Tamil

பைக் வாங்குவது போல் நடித்து திருட்டு; 3 காவல் நிலைய போலீசாரை அலறவிட்ட மனநலம் பாதித்த நபர்

அரியலூரில் பைக் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து புதிய இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

mentally challenged person arrested who theft a new bike at showroom in ariyalur district vel
Author
First Published Sep 27, 2023, 1:12 PM IST

அரியலூர் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யமஹா பைக் ஷோரூம் உள்ளது. இன்று காலையில் வழக்கம் போல் ஷோரூம் திறக்கப்பட்டது. அப்பொழுது சுமார் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் துண்டு கட்டிக்கொண்டு பைக் ஷோரூம் உள்ளே நுழைந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இரண்டரை லட்சம் மதிப்புடைய யமஹா Z15 பைக்கின் விலையை கேட்ட அவர் அந்த பைக்கை வாங்குவது போல் நடித்துள்ளார்.

பின்னர் அந்த பைக்கினை ஆன் செய்வது போல் நடித்து உயரம் சரியாக உள்ளதா என்று சோதனை செய்வது போல் ஏறி அமர்ந்துள்ளார். திடீரென அந்த பைக்கினை ஆன் செய்து வண்டியை ஓட்டிச் சென்று விட்டார். இதனை  சற்றும் எதிர்பாராத கடையின் ஊழியர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உரிமையாளர் வெங்கடேஷன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அரியலூர், கயர்லாபாத், உடையார்பாளையம் ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடினர். புது பைக்கில் அரை லிட்டர் பெட்ரோல் தான் இருக்கும் என்பதால் போலீசார்  சுமார் 20 கிலோ மீட்டர் வட்டத்தில் தேடத் தொடங்கினர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மணகெதி சுங்க சாவடியில் பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்க போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

காவிரி விவகாரம்; மாவட்ட தலைநகரங்களில் வெடிக்கும் போராட்டம் - சீமான் அதிரடி அறிவிப்பு

பின்னர் அவரை அரியலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அந்த நபர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் பேசி வருவதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வீட்டிலிருந்து ரூ.2 ஆயிரத்தை திருடிவிட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள்; அரசுப் பேருந்தில் அதிரடி காட்டிய பெண் போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios