காவிரி விவகாரம்; மாவட்ட தலைநகரங்களில் வெடிக்கும் போராட்டம் - சீமான் அதிரடி அறிவிப்பு
காவிரி நதிநீர் உரிமையை மீட்கும் வகையில் வருகின்ற 30ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடாக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் வருகின்ற 30ம் தேதி காலை 10 மணியளவில்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேரறிவிப்பு செய்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இம்மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக முன்னடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள்; அரசுப் பேருந்தில் அதிரடி காட்டிய பெண் போலீஸ்