அரியலூர் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு கண்டெடுப்பு! மகிழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு!

அரியலூர் மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சீன பானை ஓடு கிடைத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Archaeologists discover Chinese pottery in Ariyalur Maligaimedu excavation

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு என்ற இடத்தில் மாநில தொல்லியல் துறையின் மூன்றாவது கட்ட அகழாய்வு நடக்கிறது. இதில், பழங்கால நாணய அச்சு, உடைந்த சீனப் பானை ஓடு முதலிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றை பண்டை காலத்தில் தமிழகம் சீனாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு ஆதாரமாகக் கருதலாம் என்று தொல்லியல் துறையினர் சொல்கின்றனர். மாளிகைமேடு கிராமத்தில் நடைபெறும் அகழாய்வில் மூன்றாம் கட்ட ஆய்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஆரம்பித்தது.

திரிபுராவில் சோகம்... ஜகந்நாத் ரத யாத்திரையில் மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி; 18 பேர் காயம்

ஏற்கெனவே, இந்த அகழ்வாய்வில் செங்கற்கல்லால் கட்டப்கட்ட வாய்க்கால் அமைப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வாய்க்கால் அமைப்பு கிழக்கு மேற்காக 315 செ.மீ நீளமும் 45 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. இந்த வாய்க்கால் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைக் கண்டறியும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து தொல்லியல் துறையையும் கவனித்து வரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ் நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது.

போதிய ஆதாரம் இல்லை... சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை; வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு , அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Archaeologists discover Chinese pottery in Ariyalur Maligaimedu excavation

பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios