ஜெயங்கொண்டத்தில் கைவரிசை காட்டிய மங்கி குல்லா கொள்ளையர்கள்; 2 நாட்களில் அதிரடியாய் தூக்கிய போலீஸ்
அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே செல்போன் டவருக்கு பயன்படுத்தக்கூடிய காப்பர் வயர்களை திருடிய நான்கு பேர் கைது ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் டவர்களுக்கு கேபிள் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பாக செல்போன் டவர் வேலைக்கு தேவையான காப்பர் வயர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை இருப்பு வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டிற்கு முன்பாக வைத்திருந்த 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில் 26ம் தேதி இரவு பெய்த கனமழையின் போது மங்கிக்குல்லா மற்றும் டிரவுசர் அணிந்த மர்ம நபர்கள் காப்பர் வயர்களை எடுத்து டாட்டா ஏசி வாகனத்தில் திருடி சென்றது சிசிடிவி பதிவில் தெரியவந்தது. இதனை ஆதாரமாக வைத்து காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
குடியிருப்பு வாசிகளே உஷார்; வீட்டில் இருந்த தாய், மகளிடம் குல்லா கொள்ளையர்கள் செயின் பறிப்பு
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர். சிசிடிவி வீடியோவை வைத்து காப்பர் ஒயர்களை திருடிய திருச்சி இபி பகுதியை சேர்ந்த ஐயப்பன், தினேஷ்குமார், வசந்தன், கோபி ஆகிய 4 பேரை போலிசார் கைது செய்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலிசார் தொடர்ந்து 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.