50 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சர் கார்ஃபீல்டு சோபர்ஸ், ஒரு ஓவரில் அடித்த 6 சிக்ஸர்கள் தான், தனக்கு உத்வேகத்தை கொடுத்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம், யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியது. 2007 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார் யுவராஜ் சிங். அது தற்போதுவரை மிகப்பெரிய சாதனையாக உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத சம்பவம் அது. 

யுவராஜ் சிங்கிற்கு முன், 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த சம்பவத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ஃபீல்டு சோபர்ஸ் செய்துள்ளார். அதன் 50வது ஆண்டு தினத்தன்று அதை நினைவுகூர்ந்துள்ளா யுவராஜ் சிங்.

1968ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஆடிய கார்ஃபீல்டு, ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். முதல் தர போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் அவர்தான். அதன்மூலம் ஊக்குவிக்கப்பட்டுத்தான் யுவராஜ் சிங், 2007ல் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

இதுதொடர்பாக யுவராஜ் சிங் தி டெலிகிராப் பத்திரிகைக்கு அனுப்பிய வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில், சர் கேரி 6 பந்துகளில் 6 சிக்ஸர்களின் அடித்ததை பற்றி 50 ஆண்டுகள் கழித்து தற்போதும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கேரி, ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதை பார்த்து, அதேபோல் அடிக்க நினைத்தேன். எனக்கான தருணம் 2007ல் வந்தது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.