Yoga is the one that hit anyone in the IPL auction for Irban Adding to Gujarat team

குஜராத் அணியில் இருந்து டுவைன் பிராவோ விலகியதால், அவருக்குப் பதிலாக, ஐபிஎல் ஏலத்தில் யாருமே வாங்காத இர்ஃபான் பதான் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இடது தொடையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிராவோ, அதன் தாக்கத்திலிருந்து முழுவதும் மீள்வதற்காக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்குப் பதிலாக இர்ஃபான் பதான் அணியில் குஜராத் அணியில் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஏலத்தின்போது எந்தவொரு அணியும் பதானை தேர்வு செய்யவில்லை. அவருக்கு ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு, இருமுறை அவர் ஏலத்தில் பங்கேற்றபோதும் அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.