மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியடைந்தது.. மூன்று முறையும் பைனலில் வந்து தோல்வியை தழுவியுள்ளது.
WPL 2025 Delhi Capitals: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியடைந்த பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் பேட்டி, ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் அணி தோற்றதாகவும், கேப்டன் மெக் லானிங் தனது தலைமை மற்றும் தனிப்பட்ட ஆட்டத்திற்காக பாராட்டினார்.
டெல்லி அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வி
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த WPL 2025 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மரிசான் காப், ஜெஸ் ஜோனாசென் மற்றும் என் சரணி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓவர்களில் 149/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தொடர்ந்து மூன்றாவது WPL இறுதிப் போட்டியில் விளையாடி, 20 ஓவர்களில் 141/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
சில விதிவிலக்கான கிரிக்கெட்டை விளையாடினோம்
தோல்வி குறித்து டெல்லி அணி தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் பேட்டி கூறுகையில், "நாங்கள் மூன்று சிறந்த சீசன்களை பெற்றுள்ளோம். சில விதிவிலக்கான கிரிக்கெட்டை விளையாடினோம், ஆனால் எல்லோரும் இப்போது வருத்தத்தில் உள்ளனர். 99 சதவீதம் நேரம், அந்த விக்கெட்டில் 150 ரன்களை சேஸ் செய்ய உங்களை நம்புவீர்கள், ஆனால் மும்பை அணி பந்து வீசிய மற்றும் திட்டங்களை செயல்படுத்திய விதத்திற்கு முழு கிரெடிட் கொடுக்க வேண்டும்'' என்றார்.
ஐபிஎல் 2025: தோனி எந்த இடத்தில் களமிறங்குகிறார்? சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
மிகவும் நெருக்கமான ஆட்டம்
தொடர்ந்து பேசிய அவர், ''8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மிகவும் நெருக்கமான ஆட்டம். இது இரண்டு பவுண்டரிகள் தான். ஆனால் இறுதியில் இரண்டு பந்துகளில் தோற்றோம். இது எப்படி வேண்டுமானாலும் போயிருக்கலாம். எப்போதும் ஒரு வெற்றியாளரும், ஒரு தோல்வியாளரும் இருப்பார்கள், துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் மூன்றாவது முறையாக தோல்வியடைந்தோம்'' என்று தெரிவித்தார்.
ஹர்மன்பிரீத் கவுர் சூப்பர் பேட்டிங்
மேலும் எதிரணியை பாராட்டிய பேட்டி, "நாட் சிவர்-பிரண்ட் ஒரு சிறந்த தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்தார். மேலும் ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடினார். அவரது இன்னிங்ஸ் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது'' என்று கூறினார்.
இதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் லானிங்கையும் ஜொனாதன் பேட்டி பாராட்டினார். ''மெக் லானிங் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு, மூன்று ஆண்டுகளாக இந்த அற்புதமான வீரர்களை வழிநடத்தி வருகிறார். அவர் தொடர் முழுவதும் விதிவிலக்காக விளையாடினார்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் பலம் என்ன? பலவீனம் என்ன? மேட்ச் வின்னர்கள் யார்? யார்?
