World Younger Youth Boxin India Five Womans Go Ahead
ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ,ஜோதி குலியா, சசி சோப்ரா,நீது மற்றும் சாக்ஷி சௌத்ரி ஆகியோர் தங்களது எடைப்பிரிவில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறினர்.
ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று நடைபெற்ற போட்டியில், 64 கிலோ எடைப்பிரிவில் துருக்கி வீராங்கனை கக்லா அலூச்சை, இந்தியாவின் அன்குஷிதா போரோ எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டிய போரோ, கக்லாவை வீழ்த்தினார்.
அதேபோன்று, 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், உக்ரைன் வீராங்கனை அனஸ்தாசியா லிசின்ஸ்காவை இந்தியாவின் ஜோதி குலியா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவில் சசி சோப்ராவும் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
கோல்டன் - க்ளோவ் போட்டியில் தங்கம் வென்ற நீது 48 கிலோ எடைப் பிரிவிலும், சாக்ஷி சௌதரி 54 எடைப்பிரிவிலும் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் 38 நாடுகளிலிருந்து 150 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
