World Womens Boxing Indias Ashfa Bava advanced to the quarter-finals ...

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆஷ்தா மற்றும் ஷாஷி சோப்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆஷ்தா பவா காலிறுதிக்கு முன்னேறினார்.

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் 69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் ஆஷ்தா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரியாவின் மெலிஸ் யோனுஸாவாவை எதிர்கொண்டு அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அதேபோல், இந்தியாவின் ஷாஷி சோப்ரா தனது எடை பிரிவின் தொடக்க சுற்றில் உஸ்பெகிஸ்தானின் துர்டோனாகோன் ரக்மதோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.