உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் அசத்தலாக ஆடி இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி குரூப் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸுடன் மோதியது இதில் 2-1 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது இந்தியா.

இந்த போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அகான்ஸ்கா சலுங்கே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

பிரான்ஸை வீழ்த்தியதன் மூலம் தனது குரூப்பில் 2-ஆவது இடத்தைப் பிடித்த இந்திய அணி காலிறுதியை உறுதி செய்துள்ளது.

இந்திய அணி தனது காலிறுதியில் ஹாங்காங்கை சந்திக்கிறது.