world first rank player defeat by Ukraine player and won champion

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் உக்ரைனின் எலினோ விட்டோலினா.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 

இதில், மகளிர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனை சைமன் ஹலேப் 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு அரையிறுதியில் விட்டோலினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கொன்டவிட்டை வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். 

இறுதிச் சுற்றில் உக்ரைனின் விட்டோலினாவும் - உலகின் முதல்நிலை வீராங்கனை ருமேனியாவின் சைமன் ஹலேப்பும் மோதினர். 

இதில் 6-0, 6-4 என நேர் செட்களில் ஹலேப்பை வீழ்த்திய விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.