12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில்  வரும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றன. கோப்பையை வென்று வருவார்கள் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் ஒரு வரலாற்றை உருவாக்கப் போவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், தற்போது உள்ள பாகிஸ்தான் அணி  உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடிக்கும் என நம்புகிறார்.

இதுவரை உலகக் கோப்பை ஆறு போட்டிகளில் பாகிஸ்தான்  இந்தியாவை  தோற்கடித்தது இல்லை. இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ந்தேதி  ஓல்ட் டிராபோர்டில்  இந்தியா- பாகிஸ்தான்  அணிகள் மோதுகின்றன. 

இது குறித்து பாகிஸ்தான் ஜிடிவிக்கு  பேட்டி அளித்த மொயின் கான் , உலகக் கோப்பையில் இந்தியாவுடன்  முதல் வெற்றியை பதிவு செய்வதில் தற்போதைய அணி மிகவும் திறமை வாய்ந்தத என தெரிவித்தார். .

சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் (இந்தியாவை தோற்கடித்ததால் நான் இதைச் சொல்கிறேன். ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் தட்பவெட்ப நிலை பந்து வீச்சாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்றார்..

இது மிகவும் சுவாரஸ்யமான உலகக் கோப்பையாக இருக்க வேண்டும், இந்தியாவை பாகிஸ்தான்  வெல்ல வேண்டும் என  விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதன் பின்னர் நமது வீரரகள்  சிறப்பாக ஆடி வருகின்றனர் என்ர் மொயின்கான்.
.
கடந்த பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் பாகிஸ்தான் நன்றாக விளையாடி வருகிறது. மே-ஜூன் வானிலை எதிர்பாராதது. ஆடுகளங்களில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் வெற்றி நிச்சயம் என்கிறார்.