World Boxing Tournament begins today in Delhi

உலக குத்துச்சண்டை தொடர் போட்டிகள் டெல்லியில் இன்றுத் தொடங்குகிறது.

இன்றுத் தொடங்கும்க் உலக குத்துச்சண்டை தொடர் போட்டிகளில் "இன்டியன் டைகர்ஸ்' என்ற பெயரில் பங்கேற்கிறது. இந்த இந்திய அணி முதல் ஆட்டத்தில் நாளை கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பிலான இந்திய அணியில், கவிந்தர் சிங் பிஷ்த் (ஃப்ளை வெயிட்), அங்குஷ் தாஹியா (லைட் வெயிட்), துர்யோதன் சிங் நெகி (வெல்டர் வெயிட்), பிரிஜேஷ் யாதவ் (லைட்-ஹெவி வெயிட்), பிரவீண் குமார் (சூப்பர் ஹெவி வெயிட்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இப்போட்டியில் ஆசிய அணிகளுக்கான குரூப் "சி'யில் இந்தியாவுடன் கஜகஸ்தான், சீனா, ரஷியா அணிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அணிகளுக்கான "ஏ' பிரிவில் கியூபா, கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், வெனிசூலா அணிகளும், ஐரோப்பிய அணிகளுக்கான "பி' பிரிவில் குரோஷியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி அணிகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.