World boxing progress to Indias honorable semi-final ...

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பாந்தம்வெயிட் 56 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி, டுனீசியாவின் பிலெல் மெகதியை எதிர்கொண்டார்.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் கெளரவ் பிதுரி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்தார்.

இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை உறுதி செய்த 4-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி முதல் முறையாக பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதைச் செய்யும் 2-வது இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.