உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி, அமித் பாங்கல் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி 56 கிலோ எடைப் பிரிவில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் மிக்கோலா பட்சென்கோவை மோதி அவரை தோற்கடித்தார்.

கெளரவ் பிதுரி தனது காலிறுதியில் டுனீசியாவின் பிலெல் மெகதியை சந்திக்கிறார்.

மற்றொரு இந்தியரான அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ஈகுவடாரின் கார்லோஸ் குய்போவுடன் மோதி அவரை தோற்கடித்தார்.

அமித் பாங்கல் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவை சந்திக்கிறார்.