World Boxing India Vijender Singh - Ernest Amusu of Ghana today confronts ...
உலக குத்துச்சண்டை அமைப்பின் (டபிள்யூபிஓ) ஆசிய பசிபிக் பட்டம், மற்றும் ஒரியண்டல் பட்டத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் - கானாவின் எர்னெஸ்ட் அமுஸு ஆகியோர் இன்று மோதுகின்றனர்.
உலக குத்துச்சண்டை அமைப்பின் (டபிள்யூபிஓ) ஆசிய பசிபிக் பட்டம், மற்றும் ஒரியண்டல் பட்டத்துக்கான போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் - கானாவின் எர்னெஸ்ட் அமுஸு ஆகிய இருவரும் சூப்பர் மிடில்வெயிட் பிரிவில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இந்த போட்டி குறித்து விஜேந்தர் சிங், "மிகச் சரியான நேரத்தில் எதிராளியின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலிலேயே, இந்தப் போட்டியின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படவுள்ளது.
குறைந்த ரேங்கில் இருக்கும் வீரர்கள், தங்களை விட அதிக ரேங்கில் இருக்கும் வீரர்களை வீழ்த்திய சம்பவங்கள் உள்ளன. எனவே, அமுஸுவை நான் எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை" என்று கூறினார்.
