உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், ஆசிய சாம்பியனான 23 வயது இந்திய வீரர் அமித் பங்கால் உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷகோபிதின் ஸோய்ரோவை எதிர்கொண்டார். 

இதில், ஸோய்ரோவ் இந்திய வீரர் அமித் பங்காலை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதில் தோல்வியடைந்த அமித் பங்கால் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இதன்மூலம், உலக குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.