உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் பாஸீ 1 நிமிடம் 44.67 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதே பிரிவில் போலந்தின் ஆடம் 1 நிமிடம் 44.94 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

கென்யாவின் கிப்யேகன் பெட் 1 நிமிடம் 45.21 விநாடிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வேய்டி வான் நீகெர்க் 43.98 விநாடிகளில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கமும், பஹாமாஸின் ஸ்டீவன் கார்டினர் 44.1 விநாடிகளில் வெள்ளிப் பதக்கமும், கத்தாரின் அப்தல்லா ஹாரூன் 44.48 விநாடிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆடவர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் கென்யாவின் கிப்ருடோ 8 நிமிடம் 14.12 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார்.

மொராக்கோ வீரர் சோபியான் 8 நிமிடம் 14.9 விநாடிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவின் இவான் ஜாகெர் 8 நிமிடம் 15.53 விநாடிகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆடவர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் அமெரிக்காவின் சாம் ஹென்ரிக்ஸ் 5.95 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

போலந்தின் பியோட்டர் லீசெக் 5.89 மீ உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரான்ஸின் ரெனால்ட் லாவில்னி 5.89 மீ உயரம் த்ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர்.

மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் செக்.குடியரசின் பர்போரா ஸ்படகோவா 66.76 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

சீனாவின் லிங்வெய் லீ 66.25 மீ தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கமும், சீனாவின் ஹுய்ஹுய் லூ 65.26 மீ தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.