World Archieve India Wants to End Germany

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா – ஜெர்மணி அணிகள் மோதின.

இதில், இந்தியா 232-227 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது இந்தியா.

இந்த இந்திய அணியில் திரிஷா தேப், லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது இந்தியா.

இறுதிச்சுற்று குறித்து ஜோதி சுரேகா கூறியது:

"இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் விளையாடியதைப் போன்றே அந்தச் சுற்றிலும் சிறப்பாக விளையாடுவோம்.

கொலம்பியா அணியும் சிறப்பாக விளையாடக் கூடியது. எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டம் விறு விறுப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.