Womens team coach in Indian hockey will now train men - Sports Ministry Announcement

இந்திய மகளிர் வலைகோல் பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருக்கும் நெதர்லாந்தின் ஜோர்ட் மாரிஜ்னே தற்போது இந்திய ஆடவர் வலைகோல் பந்தாட்ட அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல், உலகக் கோப்பையை வென்ற ஜூனியர் வலைகோல் பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங், ஆடவர் சீனியர் அணியின் சிறப்புப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் ஹாக்கி இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டு கலந்து ஆலோசனைக் கூட்டம் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, ஜோர்ட் மாரிஜ்னேவை ஆடவர் அணியின் பயிற்சியாளராகவும், ஹரேந்திர சிங்கை அந்த அணியின் சிறப்புப் பயிற்சியாளராகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மகளிர் அணியுடன் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருக்கும் மாரிஜ்னே, இந்தியா திரும்பிய பிறகு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். ஹரேந்திர சிங் இன்று பொறுப்பேற்கிறார்.