women hockey white wash
மகளிர் வளைகோற் பந்தாட்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பெலாரஸ் அணியை "ஒயிட் வாஷ்' செய்தது இந்திய அணி.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது இந்திய அணி.
ஆறாவது நிமிடத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல் கோலை வந்தனா கேத்ரியா அடித்தார்.
இதன்பிறகு 15-ஆவது நிமிடத்தில் குர்ஜித் கெüர் கோலடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
52-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் யூலியா கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் இந்தியா தனது 3-ஆவது கோலை அடித்து பட்டையைக் கிளப்பினார் ராணி.
இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் கண்டது.
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன்மூலம், இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பெலாரஸ் அணியை, இந்திய அணி "ஒயிட் வாஷ்' செய்தது.
